ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை வென்ற இங்கிலாந்து அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை வென்ற இங்கிலாந்து அணி டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை வென்ற இங்கிலாந்து அணி டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து பங்கேற்கிறது. முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து வென்றது. 2-வது டி20 ஆட்டம் கான்பெராவில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. டேவிட் மலான் 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் மொயீன் அலி, 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் தவிர இதர பேட்டர்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 8 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது டி20 ஆட்டத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்று டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. மிட்செல் மார்ஷ் 45 ரன்களும் டிம் டேவிட் 40 ரன்களும் எடுத்தார்கள். சாம் கரண் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக டேவிட் மலான் தேர்வானார்.