டி20: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 178 ரன்கள் எடுத்த இங்கிலாந்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து பங்கேற்கிறது. முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து வென்றது. 2-வது டி20 ஆட்டம் கான்பெராவில் நடைபெறுகிறது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் மலான் 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் மொயீன் அலி, 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.