டி20 தொடரை வென்ற இங்கிலாந்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என வென்றது இங்கிலாந்து.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என வென்றது இங்கிலாந்து.
டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களை வென்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து.
கான்பெராவில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 12 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. 10-வது ஓவரின் மழை பெய்ததால் ஆட்டம் 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மலான் 23 ரன்கள், ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்தார்கள். டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் 130 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆஸி. அணி 3.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டது. பிறகு மழை காரணமாக 3-வது டி20 ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் டி20 தொடரை 2-0 என வென்றது இங்கிலாந்து.