செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பெண் ஊழியர்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரே ஒரு பெண் ஊழியராக ராஜ் லக்‌ஷ்மி அரோரா இடம்பெற்றுள்ளார். 

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஒரே ஒரு பெண் ஊழியராக ராஜ் லக்‌ஷ்மி அரோரா இடம்பெற்றுள்ளார். 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்காக ஆஸ்திரேலியாவில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் இந்திய அணி இதுவரை இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளது. மேலும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி முதல் உலகக் கோப்பை ஆட்டமாக அக்டோபர் 23 அன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 15 வீரர்களுடன் சேர்த்து பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என மேலும் 16 பேர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்கள்.

இந்த 16 பேரில் ஒரே ஒரு பெண் இடம்பெற்றுள்ளார். பிசிசிஐ ஊடக தயாரிப்பாளரான ராஜ்லக்‌ஷ்மி அரோரா. இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் இவரைக் காண முடியும். 

2015-ல் பிசிசிஐயில் சமூக வலைத்தள மேலாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்பிறகு நிகழ்ச்சிகளுக்கான மூத்த தயாரிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். பிசிசிஐ இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு விடியோவுக்கும் இவரே பொறுப்பு. அவருடைய அடிப்படை பணி என்பது இந்திய வீரர்களின் பேட்டிகளை ஒருங்கிணைப்பதாகும். பாலியல் புகார்களைக் கவனிக்கும் பிசிசிஐ குழுவின் தலைவராகவும் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி வரி முறைகேடு: மேலும் 2 போ் கைது

புத்தகம் வாசிப்பை வாழ்நாள் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

பாஜக-ஆா்எஸ்எஸ் நிதீஷ் குமாரை குப்பையில் வீசும்: காா்கே

அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்

ஹிமாசல், உத்தரகண்ட்: நிலச்சரிவில் 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT