கோப்புப் படம் 
செய்திகள்

விராட் கோலியை கைது செய்யுங்கள்: வைரலாகும் ட்விட்! காரணம் என்ன?

அரியலூர் மாவட்டம் பொய்யூரில் அதிர்ச்சி சம்பவம். கிரிக்கெட் பேட்டால் அடித்து கொன்ற விராட் கோலி ரசிகர் தர்மராஜ் கைது. 

DIN

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் 24 வயதான விக்னேஷ் என்பவர் ஐபிஎல் போட்டியின் பிரபலமான மும்பை இந்தியன்ஸ் (ரோஹித் சர்மா) அணியின் ரசிகர். அதே ஊரைச் சேர்ந்த 21 வயதான தர்மராஜ் ஆர்சிபி அணியின் (முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி) ரசிகர். 

இருவருக்கும் மது அருந்தும்போது கிரிக்கெட் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. விக்னேஷ் என்பவர் ஆர்சிபி அணியையும் விராட் கோலி அணியையும் கேலி செய்துள்ளதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் மது பாட்டிலாலும் கிரிக்கெட் பேட்டினாலும் விக்னேஷ் மண்டையில் அடித்துள்ளார். அதனால் விக்னேஷ் என்பவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தர்மராஜை கைது செய்துள்ளது. 

இந்நிலையில் ட்விட்டரில் விராட் கோலியை கைது செய்யுங்கள் (Arrest Virat kohli) என்ற ட்விட் வைரலாகி வருகிறது. விராட் கோலியின் ஆக்ரோஷம்தான் ரசிகர்களும் இப்படி இருக்கிறார்களென சிலர் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இந்த வைரலுக்கு காரணம் ரோகித சர்மா ரசிகர்கள் எனவும் பதிலுக்கு ரோஹித் சர்மாவையும் அவரது ரசிகர்களையும் விராட் கோலி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT