செய்திகள்

2023 ஆசியக் கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது: ஜெய் ஷா

DIN


2023 ஆசியக் கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடி 10 ஆண்டுகள் மேலாகிறது.  கடைசியாக 2008ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி, பாகிஸ்தான் சென்றது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் நடைபெற்ற 91வது பிசிசிஐ-யின் ஆண்டுக் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா கூறியதாவது:
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை போட்டிகள் பொதுவான ஒரு இடத்தில் நடக்கும். இதனால்,  இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வேண்டியதில்லை.  

2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கோப்பை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். டிஜிட்டல் உரிமையால் நமக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.  வருவாய் உயர்வது போலவே நமது உள்நாட்டு வீரர்கள் அதிகமான வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT