பதும் நிசாங்கா (கோப்புப் படம்) 
செய்திகள்

இலங்கை - நெதர்லாந்து ஆட்டத்தில் நடுவர் அளித்த தவறான தீர்ப்பு!

டிஆர்எஸ் முறையீடு செய்திருந்தால் தனஞ்ஜெயா டி சில்வா ஆட்டமிழக்காமல் இருந்திருப்பார். 

DIN

நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. 

டி20 உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.

குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்து 2 வெற்றிகளையும் நமீபியா, இலங்கை தலா 1 வெற்றியையும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. குறைவான ரன்ரேட்டைக் கொண்டிருப்பதால் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலைமை நெதர்லாந்துக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிடும். இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து தோற்றுவிட்டால் நமீபியாவை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்த வேண்டும். இல்லாவிட்டால் நமீபியா சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.

இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சமீரா, பிரமோத் மதுஷனுக்குப் பதிலாக லஹிரு குமாரா, பினுரா அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

இலங்கை அணி பவர்பிளேயின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்தது. 

7-வது ஓவரில் நெதர்லாந்து அணிக்கு இரு விக்கெட்டுகள் கிடைத்தன. பால் வான் மீகரன் முதலில் இலங்கை பேட்டர் பதும் நிசாங்காவை 14 ரன்களில் போல்ட் செய்தார். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். நடுவரின் தீர்ப்பை அவர் டிஆர்எஸ் முறையீடு செய்யவில்லை. ஆனால் அந்தப் பந்து லெக் ஸ்டம்பைத் தவறவிட்டது பிறகு தான் தெரிந்தது. இதனால் டிஆர்எஸ் முறையீடு செய்திருந்தால் தனஞ்ஜெயா டி சில்வா ஆட்டமிழக்காமல் இருந்திருப்பார். 

இலங்கை அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT