முதல் சுற்று: முக்கியமான ஆட்டத்தில் இலங்கை முதலில் பேட்டிங்!
முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.
செய்திகள்முதல் சுற்று: முக்கியமான ஆட்டத்தில் இலங்கை முதலில் பேட்டிங்!
முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.
டி20 உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை முதலில் பேட்டிங் செய்கிறது.
குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்து 2 வெற்றிகளையும் நமீபியா, இலங்கை தலா 1 வெற்றியையும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. குறைவான ரன்ரேட்டைக் கொண்டிருப்பதால் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நிலைமை நெதர்லாந்துக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிடும். இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து தோற்றுவிட்டால் நமீபியாவை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்த வேண்டும். இல்லாவிட்டால் நமீபியா சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.
இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. சமீரா, பிரமோத் மதுஷனுக்குப் பதிலாக லஹிரு குமாரா, பினுரா அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
இலங்கை அணி பவர்பிளேயின் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.