நமீபியா அணி (கோப்புப் படம்) 
செய்திகள்

எந்த அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும்?: 148 ரன்கள் எடுத்த ஐக்கிய அரபு அமீரகம்!

நமீபியாவுக்கு எதிராக 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அணி.

DIN

டி20 உலகக் கோப்பை முதல் சுற்றில் நமீபியாவுக்கு எதிராக 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அணி.

குரூப் ஏ பிரிவில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் நமீபியாவை ஐக்கிய அரபு அமீரகம் வென்றுவிட்டால் நெதர்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும். அதற்குப் பதிலாக நமீபியா வெற்றி பெற்றால் அந்த அணி அதிக நெட் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெறும். இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதியடைந்ததால் ஐக்கிய அரபு அமீரக அணியால் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முடியாது.

டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் முகமது வாசீம் 41 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஸ்வான் 29 பந்துகளில் 43 ரன்களும் பசில் ஹமீது 14 பந்துகளில் 25 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 3 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தார்கள். கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுத்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT