செய்திகள்

ரசிகர்கள் ஏமாற்றம்: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

DIN

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

நியூசிலாந்திடம் தோற்ற ஆஸ்திரேலியாவும் அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்தும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற மிகவும் ஆவலாக இருந்தன. இரு அணிகளும் தலா 1 வெற்றி, 1 தோல்வி என சம அளவில் இருந்தன.

இந்நிலையில் மெல்போர்னில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது. இரு பெரிய அணிகளும் விளையாடும் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் இந்த முடிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் மற்றொரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலிய அணி 3 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் இங்கிலாந்து அணி அதே 3 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT