செய்திகள்

லெஜண்ட்ஸ் லீக்: கேப்டன்களாக சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் தேர்வு

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் (எல்எல்சி) அணிகளின் கேப்டன்களாக இந்திய முன்னாள் வீரர்களான...

DIN

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் (எல்எல்சி) அணிகளின் கேப்டன்களாக இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி முதல்முறையாக இந்தியாவில் இந்த வருடம் நடைபெறுகிறது. செப்டம்பர் 16 அன்று தொடங்கி அக்டோபர் 8-ல் நிறைவுபெறுகிறது. கொல்கத்தா, லக்னெள, தில்லி, கட்டாக், ஜோத்பூர் ஆகிய நகரங்களில் 16 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் வருட எல்எல்சி போட்டி ஓமனில் நடைபெற்றது. 

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக சேவாக்கும் இந்தியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கெளதம் கம்பீரும் பில்வாரா கிங்ஸ் அணியின் கேப்டனாக இர்பான் பதானும் மனிபால் டைகர்ஸ் அணியின் கேப்டனாக ஹர்பஜன் சிங்கும் தேர்வாகியுள்ளார்கள். இந்த வருடப் போட்டியை இந்தியாவின் 75-வது சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 16 அன்று இந்தியா மஹாராஜாஸ் - வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான காட்சி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா மஹாராஜாஸ் அணியின் கேப்டனாக கங்குலியும் வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இயன் மார்கனும் செயல்படவுள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT