செய்திகள்

வங்கதேச அணியின் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த இலங்கை வீரர்

DIN

இலங்கை அணியில் உலகத் தரமான பந்துவீச்சாளர்கள் இல்லை என்கிற வங்கதேச அணியின் விமர்சனத்துக்கு இலங்கை வீரர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி.

துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 38, ஆசிப் ஹுசைன் 39 ரன்கள் எடுத்தார்கள். பிறகு பேட்டிங் செய்த இலங்கை அணி, 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குசால் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் நோ பால், வைட் எதுவும் வீசவில்லை. ஆனால், 4 நோ பால்கள், 8 வைட்களை வீசியதால் மிகவும் பாதிக்கப்பட்டது வங்கதேச அணி. சுழற்பந்து வீச்சாளரான மெஹிதி ஹசன் 2 நோ பால்களை வீசினார். கடைசி ஓவரில் இலங்கை அணிக்கு 4 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நோ பால் வீசி வங்கதேச ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார் மெஹிதி ஹசன். 

இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இரு அணிகளும் பேட்டிகளின் வழியாக மோதிக்கொண்டார்கள். வங்கதேச அணியில் இரு நல்ல பந்துவீச்சாளர்கள் (முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஷகில் அல் ஹசன்) தான் உள்ளார்கள். அவர்களைத் தவிர உலகத் தரமான பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் இல்லை என இலங்கை அணியின் கேப்டன் ஷனகா கூறினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இலங்கை அணியில் உலகத் தரமான பந்துவீச்சாளர் என ஒருவர் கூட இல்லை என வங்கதேச அணியின் இயக்குநர் கலீத் மஹமுது கூறினார். 

இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு இலங்கை அணி வீரர் மஹீஸ் தீக்‌ஷனா, ட்விட்டரில் கூறியதாவது: 11 சகோதரர்கள் இருக்கும்போது அணியில் உலகத் தரமான பந்துவீச்சாளர்கள் தேவையில்லை என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT