செய்திகள்

பாகிஸ்தான் வீரரின் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான ஆட்டங்களில் 200 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற சாதனையை...

DIN

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான ஆட்டங்களில் 200 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களை எளிதாக வென்று தொடரை வென்றது ஆஸி. அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முழு பலம் கொண்ட ஆஸி. அணி எதிர்பாராதவிதமாக 31 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேவிட் வார்னர் மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்து 94 ரன்கள் எடுத்தார். 28 வயது சுழற்பந்து வீச்சாளர் ரையன் பர்ல், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எளிதான இலக்கை விரட்ட ஜிம்பாப்வே தடுமாறினாலும் 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியை ஜிம்பாப்வே அணி தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது. 1992-ல் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய ஜிம்பாப்வே, 30 வருடங்கள் கழித்து மீண்டும் விளையாட வந்து முதல் வெற்றியை அடைந்துள்ளது.   

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 8 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்தார். இதன்மூலம் புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான ஆட்டங்களில் 200 விக்கெட்டுகளை எடுத்தவர் என்கிற பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஸ்டாக்கின் சாதனையை முறியடித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். 1995-ல் 104 ஒருநாள் ஆட்டங்களில் 200 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார் சக்லைன் முஸ்டாக். தற்போது 102 ஒருநாள் ஆட்டங்களில் 200 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ஸ்டார்க். 

குறைந்த ஆட்டங்களில் 200 விக்கெட்டுகள்

102 ஆட்டங்கள் - ஸ்டார்க் 
104 - சக்லைன் முஸ்டாக் 
112 - பிரெட் லீ 

குறைந்த பந்துகளில் 200 ஒருநாள் விக்கெட்டுகள்

5240 பந்துகள் - ஸ்டார்க் 
5457  பந்துகள் - சக்லைன் முஸ்டாக் 
5640  பந்துகள் - பிரெட் லீ 

ஒருநாள் கிரிக்கெட்: மிட்செல் ஸ்டார்க்

ஆட்டங்கள் - 102
விக்கெட்டுகள் - 200
சிறந்த பந்துவீச்சு - 6/28
சராசரி - 22.32
ஸ்டிரைக் ரேட் - 26.23
எகானமி - 5.11
5 விக்கெட்டுகள் - 8
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT