செய்திகள்

துபை ஓபன் செஸ்ஸின் இறுதிச் சுற்று : அரவிந்த் சிதம்பரம் - பிரக்ஞானந்தா போட்டி டிரா! 

22-வது துபை ஓபன் செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தாவும் அரவிந்த் சிதம்பரம் விளையாடிய போட்டி டிராவில் முடிவடைந்தது. 

DIN

22-வது துபை ஓபன் செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தாவும் அரவிந்த் சிதம்பரம் விளையாடிய போட்டி டிராவில் முடிவடைந்தது. 

22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 78 இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். 

தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், பிரக்ஞானந்தாவுக்குமிடையே நடந்த இறுதிச் சுற்று போட்டியில் பிரக்ஞானந்தாவின் 38வது நகர்த்தலில் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் புள்ளிகள் அடிப்படையில் அரவிந்த் சிதம்பரம் 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்ததால் அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

அரவிந்த சிதம்பரம் முதலிடமும், அலெக்ஸாண்டர் இரண்டாவது இடமும். பிரக்ஞானந்தா மூன்றவது இடமும், குப்தா அபிஜித் நான்காவது இடமும் பிடித்தனர். இதில் அலெக்ஸாண்டரைத் தவிர்த்து மற்ற மூவர் இந்தியர்கள். இரண்டு பேர் தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

விளையாட்டில் அரசியல் !

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

SCROLL FOR NEXT