செய்திகள்

சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு: முஷ்ஃபிகுர் ரஹிம்

வங்கதேச அணி விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

DIN

வங்கதேச அணி விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி இலங்கையிடம் தோற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது 35 வயதான முஷ்ஃபிகுர் ரஹிம் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 102 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 1500 ரன்களை எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 115. சராசரி 19.5. 

“சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். வாய்ப்பு வரும்போது  கிளப்தொடர்களில் விளையாட நான் தயாராக இருப்பேன். டெஸ்ட் மட்டும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக" தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT