செய்திகள்

பிரசித் கிருஷ்ணா விலகல்: இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் சேர்ப்பு

வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்குக் காயம் ஏற்பட்டதையடுத்து இந்திய ஏ அணியில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. 

பெங்களூரில் நடைபெற்ற முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் டிரா ஆனது. இந்நிலையில் முதுகு வலி காரணமாக இந்தத் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விலகியுள்ளார். இதையடுத்து ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா விளையாடவில்லை. தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஷர்துல் தாக்குர், இந்திய ஏ அணியினருடன் விரைவில் இணையவுள்ளார். 

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட், செப்டம்பர் 8 அன்று தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT