முகப்பு
செய்திகள்

இந்திய அணியில் ஷமி ஏன் இல்லை?: ரவி சாஸ்திரி கேள்வி!

ஆசியக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறாதது குறித்து...

செய்திகள்

இந்திய அணியில் ஷமி ஏன் இல்லை?: ரவி சாஸ்திரி கேள்வி!

ஆசியக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறாதது குறித்து...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

ஆசியக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

ஆசியக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையிடம் தோற்ற இந்திய அணி தற்போது போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் விளையாடவுள்ளன. தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இன்று விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி பற்றி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணியின் தேர்வு இன்னும் கொஞ்சம் சரியாக இருந்திருக்கலாம். முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர்கள். உங்களுக்கு இப்பகுதியின் சூழல் தெரியும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அவ்வளவாக ஆடுகளங்கள் உதவாது. இந்தப் போட்டிக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வந்திருப்பது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. முகமது ஷமி போன்ற இன்னொரு வீரரைத் தேர்வு செய்திருக்கலாம். இப்போட்டியில் விளையாடாமல் அவர் தற்போது வீட்டில் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷமி இங்கு விளையாடாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது என்றார். 

ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் அணிக்காக 16  ஆட்டங்களில் விளையாடிய ஷமி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

முழு கட்டுரையைப் படிக்க →