செய்திகள்

இங்கிலாந்து - தெ.ஆ. டெஸ்ட் தொடர்ந்து நடைபெறும்: அறிவிப்பு

3-வது டெஸ்ட் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 96. எலிசபெத் மறைவு காரணமாக லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. டெஸ்ட் தொடர் 1-1 எனத் தற்போது சமனில் உள்ளது. 

இந்நிலையில் 3-வது டெஸ்ட் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேசமயம் கூடுதலாக ஒரு நாளைக் கொண்டு டெஸ்ட் ஆட்டத்தை நீட்டித்துக்கொள்வதற்கு தென்னாப்பிரிக்க வீரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சனிக்கிழமையான இன்று 3-வது டெஸ்டின் 3-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. ஆட்டம் தொடங்கும் முன்பு எலிசபெத்தின் மறைவுக்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டெஸ்டின் கடைசி மூன்று நாள்களிலும் 98 ஓவர்கள் வீசப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஐ பயன்பாட்டால் எஸ்ஐஆரில் குளறுபடி: தோ்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

சிங்கப்பூா்: புலம்பெயா் தொழிலாளா்களுடன் இந்திய தூதரகம் பொங்கல் கொண்டாட்டம்

காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ! கண்ணி வெடிகள் வெடித்ததால் பதற்றம்!

மகாத்மா காந்தியின் போதனைகள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம்: ஜொ்மனி பிரதமா்

தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-62!

SCROLL FOR NEXT