ட்விட்டரிலும் சாதனை படைத்த விராட் கோலி
ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் விராட் கோலியை 50 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் விராட் கோலியை 50 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
பிரபல வீரரான 33 வயது விராட் கோலி இந்திய அணிக்காக 2008 முதல் 102 டெஸ்டுகள், 262 ஒருநாள், 104 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சதம் எடுத்தார் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக. இது அவருடைய 71-வது சர்வதேச சதம்.
ட்விட்டர், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் விராட் கோலியை ஏராளமான பேர் பின்தொடர்கிறார்கள். இன்ஸ்டகிராமில் கோலியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை - 211 மில்லியன். ஃபேஸ்புக்கில் 49 மில்லியன். இந்நிலையில் ட்விட்டரில் கோலியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்த எண்ணிக்கையை அடைந்த முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் கோலி.
Related Article
பதவி விலக தெ.ஆ. பயிற்சியாளர் முடிவு
உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கம்: சஞ்சு சாம்சன் வெளியிட்ட பதிவு!
இந்த இரு வீரர்களையா தேர்வு செய்யவில்லை?: அசாருதீன் ஆச்சர்யம்!
அது ஏன் இல்லை, இது ஏன் இல்லை எனக் கேட்கக் கூடாது...: உலகக் கோப்பை அணி பற்றி கவாஸ்கர்
அனைத்து இந்திய டி20 உலகக் கோப்பை அணிகளிலும் இடம்பிடித்த ஒரே வீரர்!
தேர்வுக்குழுத் தலைவராக நான் இருந்திருந்தால்...: உலகக் கோப்பைக்கான இந்திய அணி பற்றி ஸ்ரீகாந்த்