முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை தொடரில் இவர்தான் தொடக்க ஆட்டக்காரர்: ரோஹித் சர்மா பேட்டி

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக  கே.எல்.ராகுல் களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:21 AM
பகிர்:

உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க      ஆட்டக்காரராக  கே.எல்.ராகுல் களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியுடனான தொடர்களில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 20) நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 18) இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: “  கே.எல்.ராகுல் ஒரு சிறந்த வீரர். அவர் தொடக்க வீரராக களமிறங்குவாரா என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நாங்கள் அந்த விஷயத்தில் தெளிவாக உள்ளோம். தொடக்க ஆட்டக்காரர் என்ற விஷயத்தில் கே.எல்.ராகுலுக்குதான் முன்னுரிமை. அவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவார். அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க எங்களிடம் வீரர்கள் உள்ளனர். நான் தொடக்க வீரராக விளையாடுவேன். 

விராட் கோலி இந்திய அணிக்கான மூன்றாவது தெரிவு ஆகும். அவரும் சில போட்டிகளில் இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார். நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக சதம் அடித்திருந்தார்.

உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.” என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →