நியூசி. ஏ அணியை 167 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய இந்திய ஏ அணி
இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது நியூசிலாந்து ஏ அணி.
செய்திகள்நியூசி. ஏ அணியை 167 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய இந்திய ஏ அணி
இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது நியூசிலாந்து ஏ அணி.
இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது நியூசிலாந்து ஏ அணி.
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது.
ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து ஏ அணி 40.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மைக்கேல் ரிப்பன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளும் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
இந்திய ஏ அணி, 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ருதுராஜ் 39, திரிபாதி 21 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.