விராட் கோலியை கைது செய்யுங்கள்: வைரலாகும் ட்விட்! காரணம் என்ன?
அரியலூர் மாவட்டம் பொய்யூரில் அதிர்ச்சி சம்பவம். கிரிக்கெட் பேட்டால் அடித்து கொன்ற விராட் கோலி ரசிகர் தர்மராஜ் கைது.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தில் 24 வயதான விக்னேஷ் என்பவர் ஐபிஎல் போட்டியின் பிரபலமான மும்பை இந்தியன்ஸ் (ரோஹித் சர்மா) அணியின் ரசிகர். அதே ஊரைச் சேர்ந்த 21 வயதான தர்மராஜ் ஆர்சிபி அணியின் (முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி) ரசிகர்.
இருவருக்கும் மது அருந்தும்போது கிரிக்கெட் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. விக்னேஷ் என்பவர் ஆர்சிபி அணியையும் விராட் கோலி அணியையும் கேலி செய்துள்ளதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் மது பாட்டிலாலும் கிரிக்கெட் பேட்டினாலும் விக்னேஷ் மண்டையில் அடித்துள்ளார். அதனால் விக்னேஷ் என்பவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தர்மராஜை கைது செய்துள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் விராட் கோலியை கைது செய்யுங்கள் (Arrest Virat kohli) என்ற ட்விட் வைரலாகி வருகிறது. விராட் கோலியின் ஆக்ரோஷம்தான் ரசிகர்களும் இப்படி இருக்கிறார்களென சிலர் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இந்த வைரலுக்கு காரணம் ரோகித சர்மா ரசிகர்கள் எனவும் பதிலுக்கு ரோஹித் சர்மாவையும் அவரது ரசிகர்களையும் விராட் கோலி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.