செய்திகள்

டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாகவும் 2-வது நாள் ஆட்டம் அரசி எலிசபெத் மறைவு காரணமாகவும் கைவிடப்பட்டன. இதனால் மீதமுள்ள மூன்று நாள்களுக்கு மட்டுமே டெஸ்ட் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 118 ரன்களுக்கும் 2-வது இன்னிங்ஸில் 169 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 158 ரன்கள் எடுத்தது. டெஸ்டை வெற்றி பெற 130 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்திருந்தது. லீஸ் 32, கிராவ்லி 57 ரன்கள் எடுத்திருந்தார்கள். இந்நிலையில் இன்று 22.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 3-வது டெஸ்டை அபாரமான முறையில் வென்றது இங்கிலாந்து அணி. கிராவ்லி 69 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

3-வது டெஸ்டை வென்ற இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்டில் மொத்தமாகவே 151.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

மகாபாரதத்தில் தெய்வீக மாதர்கள்

இலிங்காயத்துகள் இனவரைவியல் ஆய்வு

கடவுள் உண்டு கடவுள் ஒன்று

பெண் அரசியல்

SCROLL FOR NEXT