செய்திகள்

ஸ்டம்புகள் உடைய மும்பை பேட்டர்களை திணறடித்த அர்ஷ்தீப் சிங்

DIN

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஸ்டம்புகள் உடையும்படி மும்பை அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அர்ஷ்தீப் சிங்.

ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன் அணி விளையாடியது. 

இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருப்பது போலவே தொடக்கத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி என்பது போல் போட்டி மாறியது. அந்த அணியின் டிம் டேவிட் 13 பந்துகளில் 25 ரன்கள் குவித்திருந்தார். திலக் வர்மாவும் களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் டிம் டேவிட் 1 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ரன் ஏதும் இல்லை. மூன்றாவது பந்தில் மிடில் ஸ்டம்ப் உடைய திலக் வர்மாவின் விக்கெட்டினை வீழ்த்தினார் அர்ஷ்தீப். அதற்கு அடுத்த பந்திலேயே மீண்டும் மிடில் ஸ்டம்ப் உடைந்தது. இந்த முறை நேஹல் வதேரா அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். 

தொடர்ச்சியாக இரண்டு பேர் ஆட்டமிழந்ததால் ஆட்டம் பஞ்சாப் பக்கம் திரும்பியது. கடைசி இரண்டு பந்துகளில் மும்பையின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட  சிறப்பாக பந்துவீசி வெற்றியைப் பஞ்சாப் வசமாக்கினார் அர்ஷ்தீப் சிங்.

4 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT