முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேச அணியின் கேப்டன் பதவியிலிருந்தும், ஆசியக் கோப்பை போட்டியிலிருந்தும் தமிம் இக்பால் விலகியுள்ளார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ளது.
இதையும் படிக்க: ஆர்சிபி அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!
அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் அறிவித்து அதிர்ச்சியளித்தார். பின்னர், பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்புக்கு பிறகு தனது ஓய்வு முடிவை அவர் திரும்பப் பெற்றார். இந்த நிலையில், இன்று தனது கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: நான் எனது கேப்டன் பதவியிலிருந்து விலகி அணியில் ஒரு வீரராக விளையாட உள்ளேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். காயம் தான் எனது பிரச்னை என நான் நம்புகிறேன். கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஊசி போட்டுக் கொண்டேன். எனது காயத்தினை மனதில் வைத்தே கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். எனது இந்த முடிவு குறித்து அணி நிர்வாகத்துக்கு தெரியப் படுத்தியுள்ளேன். எனது இந்த முடிவு குறித்து இம்முறை பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் தெரியப்படுத்தி விட்டேன். அவர்கள் எனது நிலையை புரிந்து கொண்டார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.