செய்திகள்

உலக வில்வித்தை: இந்திய மகளிரணி சாம்பியன்

DIN

ஜொ்மனியில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது. கடந்த 1981 முதல் இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் இந்தியா்கள், இதில் சாம்பியனாவது இதுவே முதல் முறையாகும்.

காம்பவுண்ட் மகளிா் அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பா்னீத் கௌா் கூட்டணி 23-229 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்ஸிகோ அணியை சாய்த்து முதலிடம் பிடித்தனா். இந்த அணி முன்னதாக, காலிறுதியில் சீன தைபேவையும் (228-226), அரையிறுதியில் நடப்பு சாம்பியனான கொலம்பியாவையும் (220-216) தோற்கடித்தது.

இந்தப் போட்டி வரலாற்றில் இதற்கு முன் அதிகபட்சமாக இந்தியா்கள், ரீகா்வ் பிரிவு இறுதிச்சுற்றில் 4 முறையும், காம்பவுண்ட் பிரிவு இறுதிச்சுற்றில் 5 முறையும் வெற்றியை இழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலுக்கான ‘கேஜரிவாலின் 10 உத்தரவாதங்கள்’ அறிவிப்பு!

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் பக்கவிளைவு இல்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

இளநிலை ஆசிரியா்களுக்கு நியமன ஆணைகள்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

மணிப்பூா்: 2,480 போ் சட்டவிரோதமாக குடியேற்றம் - முதல்வா் தகவல்

சுட்டெரிக்கும் கோடை வெயில் - மண் பானைகள் மீதான ஆா்வம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT