செய்திகள்

ரோஹித் சர்மா தான் எனக்கு எப்போதும் ஊக்கமளிப்பவர்: திலக் வர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் தனது சர்வதேச கிரிக்கெட் தொடக்கத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இளம் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார். 

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் தனது சர்வதேச கிரிக்கெட் தொடக்கத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இளம் வீரர் திலக் வர்மா தெரிவித்துள்ளார். 

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்த இரு போட்டிகளிலும் இளம் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 39 ரன்களும், இரண்டாவது போட்டியில் 51 ரன்களும் எடுத்தார். 

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் தனது சர்வதேச கிரிக்கெட் தொடக்கத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தினார். அவர் எப்போதும் ஆட்டத்தை மகிழ்ச்சியாக ரசித்து விளையாட சொல்வார். அவர் எப்போதும் நான் எப்படி விளையாட வேண்டும் என்று வழிகாட்டுவார். சிறுவயதிலிருந்தே ரெய்னா மற்றும் ரோஹித் அவர்கள் இருவரும் தான் எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்துள்ளனர். நான் அதிகமாக ரோஹித் சர்மாவுடன் நேரம் செலவிட்டுள்ளேன். எனது முதல் ஐபிஎல் போட்டியின்போது, திலக் வர்மா அனைத்து வடிவிலான போட்டிக்குமான வீரர் என ரோஹித் சர்மா கூறினார். அவரது வார்த்தைகள் எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT