11 மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் பந்து வீசிய பும்ரா: விடியோ வெளியிட்ட பிசிசிஐ!
11 மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் பும்ரா பந்து வீசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
11 மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் பும்ரா பந்து வீசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் நீண்ட நாள்களாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் விளையாடியிருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்து இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவர் கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக அணியில் இல்லாத நிலையில் பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், பும்ரா வலைப்பயிற்சியில் பந்துவீசும் விடியோவை பிசிசிஐ நேற்று (ஆகஸ்ட் 16) ட்விட்டரில் (எக்ஸ்) வெளியிட்டது.
அதில் பிசிசிஐ பதிவிட்டிருப்பதாவது: இந்த தருணத்துக்காக நாம் அனைவரும் இத்தனை நாள்களாக காத்திருந்தோம். பும்ரா அவரது அபார பந்துவீச்சு திறமையால் அறியப்பட்டவர் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஓய்விலிருந்த வேகப் பந்துவீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா அணிக்குத் திரும்பியுள்ளார்.
இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.