செய்திகள்

2011 உலகக்கோப்பை அணியில் ரோஹித் தேர்வாகாததற்கு காரணம் தோனி!

முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட் கூறிய தகவல் ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

இந்திய கிரிக்கெட் அணி 1983க்குப் பிறகு உலகக் கோப்பை 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் வென்றது. இந்த அணியில் அப்போதைய இளம் வீரரான ரோஹித் சர்மா தேர்வாகவில்லை. இது குறித்து 2011இல் ரோஹித், “உலகக் கோப்பை அணியில் இல்லாதது குறித்து மிகுந்த வருத்தமளிக்கிறது. உண்மையிலேயே இது ஒரு பெரிய பின்னடைவு” எனக் கூறியிருந்தார். 

இது குறித்து நேர்காணல் ஒன்றில் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட், “நாங்கள் தேர்வு செய்த 14 பேர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். 15ஆவது வீரராக நாங்கள் ரோஹித் சர்மாவை பரிந்துரைத்தோம். பயிற்சியாளர் கேரி கிறிஸ்டெனும் இதை சரி என உணர்ந்தார். ஆனால் கேப்டன் தோனி இவருக்கு பதிலாக சுழல் பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வேண்டுமென்றார். பின்னர் பயிற்சியாளரும் அதை ஏற்றுக் கொண்டார். அதனால்தான் ரோஹித் அந்த அணியில் இடம்பெறவில்லை” எனக் கூறியுள்ளார். 

2013இல் ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக விளையாட வைத்து அவரது வாழ்க்கையை மாற்றியதும் எம்.எஸ்.தோனி என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். உலகின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார். 

தோனி மாதிரி ரோஹித் சர்மாவும் உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வென்று தருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்பல்லோவில் 6,000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை

தொழிலதிபருடன் விடுதியில் அறை எடுத்து தங்கி நகை திருட்டு: தோழி கைது!

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு: நாளை முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னை-திருச்சி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT