செய்திகள்

ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை போட்டிகளை இலவசமாக எதில் பார்க்கலாம்? 

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 

DIN

ஆசியக் கோப்பை போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளன. இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் ஆசியக் கோப்பை போட்டிகள் 50 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளன. 

ஆசியக் கோப்பை போட்டிகள் ஆக.30ஆம் நாள் தொடங்கி செப்.17ஆம் நாள் முடிவடைய உள்ளன. 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் நாள் தொடங்கி நவ.19ஆம் நாள் முடிவடைய உள்ளன. இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் என்பதால் இந்திய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 

ஆசியக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் செயலியில் இலவசமாக பார்க்கலாம். லேப்டாப் அல்லது மிகப் பெரிய திரையில் பார்க்க வேண்டுமானால் சந்தா  செலுத்தி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருடத்திற்கு ரூ.1499 சந்தாவும் (பிரீமியம்) மாதாந்திரம் ரூ.299 சந்தாவும் (பிரீமியம்) வருடத்திற்கு ரூ.899 விலையிலும் சந்தாக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT