கடின உழைப்பால் பாகிஸ்தான் அணி ஐசிசி ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் ஐசிசி தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் சிறிது புள்ளிகள் முன்னேறி 118 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிக்க: ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; மீண்டும் அணிக்கு திரும்பிய நூர் அகமது!
இந்த நிலையில், கடின உழைப்பால் பாகிஸ்தான் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது: ஐசிசி தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்ததற்கு அணி வீரர்கள் அனைவரின் கடின உழைப்பே காரணம். நீங்கள் எப்போது ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்தாலும் அது கண்டிப்பாக உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கப் போகிறது. முதல் இடம் பிடித்ததற்கு ஒட்டுமொத்த அணியின் உழைப்புமே காரணம். நாங்கள் முதல் இடத்தில் ஏற்கனவே இருந்தோம். துரதிருஷ்டவசமாக ஒரு தோல்வியினால் அந்த இடத்தை இழந்தோம். கடவுளின் கருணையால் நாங்கள் மீண்டும் இந்த இடத்துக்கு வந்துள்ளோம். வீரர்களின் கடின உழைப்பும், அவர்களது சிறப்பான செயல்பாடுமே இந்த இடத்தில் நாங்கள் இருப்பதற்கு காரணம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரை முழுவதுமாக வென்றது ஆசியக் கோப்பை தொடருக்கு எங்களுக்கு உந்துசக்தியாக அமையும். இந்த தொடர் எங்களுக்கு எளிதானதாக இருக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது சவாலாக இருந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.