கோப்புப் படம் 
செய்திகள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? 

ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, இம்மாதம் 30-ஆம் தேதி முதல் செப்டம்பா் 17-ஆம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. 

ஆசிய கோப்பைக்கான அணி விவரம்: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா, கே.எல்.ராகுல், ஹா்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷா்துல் தாக்குா், அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன்.

இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படுமென ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் செப்.3ஆம் நாள் இந்திய அணி அறிவிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பையில் இந்திய அணி செப்.2ஆம் நாள் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சொதப்பி வருகிறார். திலக் வா்மா ஒருநாள் போட்டிகளுக்கு புதுவரவு. அதனால் இந்த ஆசிய கோப்பை போட்டி உலகக் கோப்பை தேர்வுக்கு முக்கிய பங்கு வகிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.5ஆம் நாள் இந்திய மண்ணில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT