பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் 
செய்திகள்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் புதிய சாதனை!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் புதிய சாதனை படைத்துள்ளார்.

DIN

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 342 ரன்கள் குவிக்க, நேபாளம் அணி 23.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் 151 ரன்களும், இஃப்திகர் அகமது 109 ரன்களும் குவித்தனர்.

இந்த நிலையில், ஆசியக் கோப்பை வரலாற்றில் 150 ரன்களை கடந்த முதல் கேட்பன் என்ற சாதனையை ஆஸம் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக வங்கதேச அணியின் கேப்டனாக இருந்தபோது முஷ்ஃபிகுர் ரஹிம் 144 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல், ஆசியக் கோப்பை தொடர்களில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரராக இந்திய அணியின் விராட் கோலி 183 தொடர்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT