பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்: விராட் கோலி
பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவாக உள்ளதால் வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயாத்தில் இருப்பதாக உணர்வதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவாக உள்ளதால் வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயாத்தில் இருப்பதாக உணர்வதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடர் நேற்று தொடங்கிய நிலையில், நாளை மறுநாள் (செப்டம்பர் 2) நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடைசியாக பாகிஸ்தானுடன் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில், இரு அணிகளும் நாளை மறுநாள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவாக உள்ளதால் வீரர்கள் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயாத்தில் இருப்பதாக உணர்வதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு அவர்களது பலம் என உணர்கிறேன். தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர். ஆட்டத்தின் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய திறன் படைத்தவர்கள் அவர்கள். அதனால், நீங்கள் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். என்னுடைய ஆட்டத்தை எப்படி சிறப்பாக ஆட வேண்டும் என்பதை நான் சரியாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு பயிற்சியின் போதும் அந்தப் புரிதல் எனக்கு உதவியுள்ளது. எனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் உதவியுள்ளது என்றார்.