செய்திகள்

யூடியூப் சேனலை தொடங்குவீர்களா?: வைரலாகும் தோனியின் பதில்!

DIN

முன்னாள் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2020ஆம் ஆண்டு ஆக.15ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐசிசியின் முக்கியமான 3 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். அவரது சாதனைகளை இதுவரை எந்த இந்திய கேப்டனும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2023ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனியின் தலைமையில் வென்றது. தற்போது, ஐபிஎல் மினி ஏலம் டிச.19இல் தொடங்க உள்ளது. சிஎஸ்கே அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். 

சமூக ஊடங்கங்களில் ஆக்டிவாக இல்லாத தோனி எப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருப்பார். 

இந்நிலையில் எம்.எஸ்.தோனியிடம் யூடியூப் சேனலை தொடங்குவீர்களா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மிகவும் கடினம் என்பதால் என்னால் அதை செய்ய முடியாது. நான் கேமிராவுக்கு கூச்சப்படுபவன் கிடையாது ஆனால் என்னால் செய்ய முடியாது. நேரிடையாக பேசுவதற்கு மட்டுமே எனக்கு பிடிக்கும். நான் அந்த மாதிரியான நபர்.

மேலும், நான் எனக்கு தோன்றியடி இருப்பதால் என்னால் யூடியூப் சேனலை நடத்த முடியுமென தோன்றவில்லை. ஒரு நாளைக்கு 2-3 விடியோக்களை பதிவிட்டு பிறகு மறந்து விடுவேன். இன்ஸ்டாகிராம் கணக்கினை போல் ஒரு வருடத்துக்கு காணாமல் போய்விடுவேன்” எனக் கூறினார். 

இந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT