செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகும் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (டிசம்பர் 10) தொடங்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவரது உடல்நிலை குறித்து  தென்னாப்பிரிக்க அணியின் மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அணியின் இடதுகை வேகப் பந்துவீச்சாளரான பியூரன் ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹென்ரிக்ஸ் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT