செய்திகள்

இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாருக்கு காயம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்தப் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கின்போது மூன்றாவது ஓவரில் ரீஸா ஹென்ரிக்ஸ் அடித்த பந்தை தடுக்க முயன்ற சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது.

 இந்திய அணியின் மருத்துவரோடு அவர் பெவிலியன் திரும்பினார். அதன்பின், 11 ஓவர்களுக்கு அவர் ஃபீல்டிங் செய்யவில்லை. 

காயம் குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: நான் நன்றாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது. நடக்க முடியாத அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை. அணியின் வெற்றிக்கானப் போட்டியில் சதமடிப்பது என்பது மிகவும் அற்புதமானது. நாங்கள் அச்சமின்றி விளையாடும் விதத்தை வெளிப்படுத்தினோம். 3 விக்கெட்டுகள், 4 விக்கெட்டுகள் எடுப்பதில் குல்தீப் யாதவ் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார். அவருக்கு அவரே சிறந்த பிறந்தநாள் பரிசை கொடுத்துக் கொண்டார் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு: வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் மீது பெங்களூரில் வழக்குப் பதிவு

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம்

SCROLL FOR NEXT