செய்திகள்

நம்பர் 7 ஜெர்சிக்கு ஓய்வளித்து எம்.எஸ்.தோனியை கௌரவித்த பிசிசிஐ!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின்  நம்பர் 7 ஜெர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

DIN

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின்  நம்பர் 7 ஜெர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டுக்கு மகேந்திர சிங் தோனி வழங்கியுள்ள பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த மகேந்திர சிங் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது ஓய்வு முடிவை தோனி அறிவித்தார். 

மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப் பிறகு அவர் அணிந்திருந்த நம்பர் 7 ஜெர்சி எந்த ஒரு வீரருக்கும் வழங்கப்படவில்லை. சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 10 ஜெர்சியும் அவரது ஓய்வுக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாமல் இருந்தது. பின்னர்,  கடந்த 2013 ஆம் ஆண்டு நம்பர் 10 ஜெர்சி அணியை அணிவதற்கு விருப்பம் தெரிவித்த ஷர்துல் தாக்குர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதன்பின், எந்த ஒரு வீரரும் சச்சினின் நம்பர் 10 ஜெர்சி அணிந்து விளையாடவில்லை. 

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின்  நம்பர் 7 ஜெர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது: மகேந்திர சிங் தோனி மிகச் சிறந்த வீரர். இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக நம்பர் 7 ஜெர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துடனான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்த பிறகு, பிசிசிஐ விரைவில் வெள்ளைப் பந்து போட்டிகளில் நம்பர் 7 ஜெர்சிக்கு ஓய்வளிக்கும் என நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT