செய்திகள்

2-வது ஒருநாள்: இந்தியா பேட்டிங்; அறிமுக வீரராக களமிறங்கும் ரிங்கு சிங்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (டிசம்பர் 19) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்கரம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளதால் இன்றையப் போட்டியில் அவர் விளையாடவில்லை. ரிங்கு சிங் அறிமுக வீரராக ஒருநாள் போட்டிகளில் களம் காண்கிறார். 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருக்கும் நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு  களம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

ஏற்காட்டில் தொடா் மழையால் கடும் குளிா், பனி மூட்டம்

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

SCROLL FOR NEXT