பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
இதையும் படிக்க: முகமது ஷமிக்குப் பதில் யார் சேர்க்கப்பட்டாலும் எங்களுக்கு சவாலாக இருப்பார்கள்: டெம்பா பவுமா
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா நிதானமாக விளையாடினர். வார்னர் 38 ரன்களிலும், கவாஜா 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்மித் ஜோடி சேர்ந்தனர். ஸ்மித் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 44 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.