செய்திகள்

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட ரஹானே: புதிய கவுன்டி அணியில் இணைகிறார்!

புதிய அணி வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என்றார்.

DIN


இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரஹானே, கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார்.

ரஞ்சி கோப்பைப் போட்டியில் ஹைதரபாத் அணிக்கு எதிராக இரட்டைச் சதமும் அஸ்ஸாமுக்கு எதிராக 191 ரன்களும் எடுத்தார் ரஹானே. 7 ஆட்டங்களில் 634 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடினார். 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்தார். எனினும் 34 வயது ரஹானே, ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி தேர்வுக்குழுவினரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறார்.

கடந்த ஓராண்டாக இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவெடுத்துள்ளார் ரஹானே. லீசெஸ்டர்ஷைர் அணிக்காக கவுன்டி சாம்பியன்ஷிப் ஆட்டங்களிலும் 50 ஓவர் போட்டியிலும் விளையாடவுள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரஹானே, ஜூன் மாதம் முதல் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவார். 

இந்தப் பருவத்தில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி. புதிய அணி வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என்றார். இதற்கு முன்பு ஹாம்ப்ஷைர் கவுன்டி அணியில் விளையாடியுள்ளார் ரஹானே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT