செய்திகள்

பாகிஸ்தான்: கிரிக்கெட் திடல் அருகே தீவிரவாதத் தாக்குதல்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின்போது திடலுக்கு அருகே தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதால் மைதானத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

DIN

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின்போது திடலுக்கு அருகே தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதால் மைதானத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷஹீத் அஃப்ரிடி உள்பட பாகிஸ்தான் வீரர்கள் பலரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் போட்டி தொடங்கப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படுகிறது. அதில் பாகிஸ்தானின் 6 நகரங்களைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்று விளையாகின்றன. இந்த ஆண்டுக்கானப் போட்டிகள் வருகிற பிப்ரவரி 13 முதல் தொடங்க உள்ளன. அதற்கு முன்னதாக இன்று (பிப்ரவரி 5) குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஷல்மி அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் (காட்சிப் போட்டி)  நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த பயிற்சி ஆட்டத்தின் நடுவே போட்டி நடைபெறும் நவாப் அக்பர் புக்தி திடலுக்கு அருகே தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து பாகிஸ்தான் காவல் துறை சார்பில் கூறியதாவது: பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி நடைபெறும் திடலின் அருகே தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பினர் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். இந்த தீவிரவாதத் தாக்குதல் நடந்த உடனேயே போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர், நிலைமை சீரான பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது எனத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தானின் பெஷாவரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT