கோப்புப் படம் 
செய்திகள்

‘வாழ்நாளில் மறக்க முடியாத இரண்டு தருணங்கள்’- ஓய்வை அறிவித்த ஆஸி. கேப்டன்! 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 

DIN

35 வயது ஃபிஞ்ச், ஆஸ்திரேலிய அணிக்காக  2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்ட், ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டனாகவும் இருந்தவர்.

2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஃபிஞ்ச், அந்த வருடத்துக்குப் பிறகு எந்தவொரு டெஸ்டிலும் விளையாடவில்லை. எனினும் ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக உள்ளார். ஃபிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி, கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றது. 

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டி20யில் 3120 ரன்களை எடுத்துள்ளார். 142.5 ஸ்டிரைக்ரேட்டுடன் விளையாடக் கூடியவர். தற்போது டி20 தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஃபிஞ்ச் கூறியதாவது: 

என்னால் அடுத்த (2024) டி20 உலகக் கோப்பை வரை விளையாட முடியாது எனத் தெரியும். இதுதான் ஓய்வை அறிவிக்க சரியான நேரம். 

கேப்டனாக இருக்கும்போது 2021ஆம் ஆண்டு முதன்முறையாக டி20 உலகக் கோப்பை வெல்லும்போதும், 2015இல் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதும் என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சிகள் என்பேன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

திருக்கழுக்குன்றத்தில் சித்தா்களின் அபூா்வ கிரிவலம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

ஒன்றியக்குழு உறுப்பினா் தா்னா போராட்டம்

வடமாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு

போலீஸ் எனக்கூறி முதியவரிடம் மோதிரம், ரூ.3,000 பணம் திருட்டு

SCROLL FOR NEXT