செய்திகள்

400: இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், வியாழன் முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

இந்திய பேட்டர்கள் 2-வது நாளன்று பொறுப்புடன் விளையாடியதால் 2-வது நாள் முடிவில் இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது.  ரோஹித் சர்மா. 120 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 66, அக்‌ஷர் படேல் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 144 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இந்நிலையில் 3-ம் நாளன்றும் இந்திய அணி தொடர்ந்து ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 70 ரன்களில் மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார் ஷமி. கடைசியாக வந்த சிராஜ், முடிந்தளவு அக்‌ஷர் படேலுக்குத் துணையாக நின்றார். 84 ரன்கள் எடுத்து அசத்திய அக்‌ஷர் படேல், கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 139.3 ஓவர்களில் 400 ரன்கள் எடுத்து 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அறிமுக ஆஸி. வீரர் மர்ஃபி 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு! - நீதிமன்றத்தில் தகவல்

இனி Restroom போனால்கூட! பத்திரிகையாளர்கள் குறித்து இபிஎஸ்!

புரட்டாசி மாதப் பலன்கள் - கடகம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மிதுனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT