செய்திகள்

2-வது டெஸ்ட்: தில்லிக்கு வந்த இந்திய, ஆஸி. வீரர்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது.

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது. 2017-க்குப் பிறகு தில்லியில் டெஸ்ட் ஆட்டம் நடைபெறவுள்ளது. 

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த ஆஸி. அணி, நேற்று தில்லிக்கு வந்தது. முதல் டெஸ்ட், இரண்டரை நாள்களில் முடிந்ததால் சில இந்திய வீரர்கள் தங்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டார்கள். இந்திய அணியினரின் ஒரு பகுதியினர் நேற்று தில்லிக்கு வந்தார்கள். சில வீரர்கள், உதய்பூரில் நடைபெற்ற பாண்டியாவின் திருமணத்தில் பங்கேற்றார்கள். 

காயம் காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்காத நடுவரிசை பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர், 2-வது டெஸ்டில் விளையாடவுள்ளார். 

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோல்வியில் துவண்ட சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் அளித்த நம்பிக்கை!

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி

தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை(ஆக.11) பேரணி

ரஜினியின் முதல் திரைப்படம் - 50வது ஆண்டு கூலி வரை வெளியிடும் ஒரே திரையரங்கம்!

SCROLL FOR NEXT