செய்திகள்

சில மணி நேரமே நெ.1 ஆக நீடித்த இந்திய அணி: தவறை ஒப்புக்கொண்ட ஐசிசி!

நெ. 1 டெஸ்ட் அணியாக இந்திய அணி முன்னேறிய தகவல், தொழில்நுட்பத்தின் தவறால் உண்டானது என ஐசிசி கூறியுள்ளது.

DIN

நெ. 1 டெஸ்ட் அணியாக இந்திய அணி முன்னேறிய தகவல், தொழில்நுட்பத்தின் தவறால் உண்டானது என ஐசிசி கூறியுள்ளது.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், தில்லியில் வெள்ளியன்று தொடங்குகிறது. 

நேற்று வெளியிடப்பட்ட அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. இதையடுத்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் நெ.1 அணியாக இந்திய அணி இருந்ததால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அந்தத் தகவலை மிகவும் கொண்டாடினார்கள். ஆனால் அவர்களுடைய சந்தோஷம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. தொழில்நுட்பத்தின் தவறால் இந்திய அணி முதலிடம் வகித்ததாக ஐசிசி விளக்கம் அளித்தது. 

பிப்ரவரி 15 அன்று குறுகிய நேரம் ஐசிசி தரவரிசையில் தொழில்நுட்பத் தவறு ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறோம். அதனால் இந்திய அணி தவறுதலாக நெ.1 டெஸ்ட் அணியாக இருந்தது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம் என்று ஐசிசி கூறியுள்ளது. 

தவறு சரி செய்யப்பட்டதையடுத்து ஆஸ்திரேலிய அணி நெ.1 இடத்துக்கு மீண்டும் வந்தது. இந்திய அணி 2-ம் இடத்துக்குத் திரும்பியது. தரவரிசையில் ஆஸ்திரேலியா 126 புள்ளிகளும் இந்தியா 115 புள்ளிகளும் கொண்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வை போதும்... ஃபெளசி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

SCROLL FOR NEXT