செய்திகள்

ஆண்டர்சன்: 40 வயதில் நெ.1 பந்துவீச்சாளர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இந்த டெஸ்டில் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் 40 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன். இதையடுத்து கடந்த நான்கு வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஆண்டர்சன். 

தரவரிசையில் 2-ம் இடத்தில் அஸ்வினும் 3-ம் இடத்தில் கம்மின்ஸும் உள்ளார்கள். நெ.1 இடத்தை 6-வது முறையாகப் பெற்றுள்ளார் ஆண்டர்சன். கடைசியாக 2018-ல் ஐந்து மாதங்களுக்கு முதலிடத்தில் இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 682 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

1936-ல் கிளாரி கிரிம்மெட் 44 வயதில் தரவரிசையில் முதலிடம் அடைந்தார். அதன்பிறகு 40 வயதில் முதலிடத்தைப் பெற்ற பந்துவீச்சாளர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆண்டர்சன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

SCROLL FOR NEXT