செய்திகள்

ஐபிஎல் போட்டியில் பந்துவீச மாட்டேனா?: பிரபல ஆஸி. வீரர் விளக்கம்!

ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்தில் பந்துவீச மாட்டார் என்று தன்னைப் பற்றி வெளியான செய்திகளை...

DIN


ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்தில் பந்துவீச மாட்டார் என்று தன்னைப் பற்றி வெளியான செய்திகளைப் பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீன் மறுத்துள்ளார்.

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் கேம்ரூன் கிரீனை ரூ. 17.50 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. எனினும் ஐபிஎல் போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கேம்ரூன் கிரீன் பந்துவீச மாட்டார் எனச் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்து கிரீன் கூறியதாவது:

இந்தச் செய்திகள் தவறானவை. சமீபகாலமாக இப்படியொரு செய்தி உலவுவதை நானும் கவனித்தேன். எங்கிருந்து இத்தகவல் கிடைத்தது எனத் தெரியவில்லை. ஐபிஎல் தொடங்கும் முன்பு 100 சதவீதம் முழு உடற்தகுதியுடன் இருப்பேன் என்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடியபோது கிரீன் விரலில் காயம் ஏற்பட்டது. எலும்புமுறிவு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கத் தயாராகி வருகிறார். அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னுரிமை அளிக்கிறேன். முதல் டெஸ்டுக்குத் தகுதி பெற நானும் ஸ்டார்க்கும் முயன்று வருகிறோம். ஐபிஎல் போட்டியில் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். சரியான மனிதர்கள் உங்களைச் சுற்றி இருந்தால் எந்த நிலையிலிருந்தும் முன்னேறி விடலாம் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT