செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: கரோனா விதிமுறைகளில் மாற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்களும்  பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்களும்  பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஜனவரி 16-29 தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதிய கரோனா விதிமுறைகள் தொடர்பாகப் போட்டியின் இயக்குநர் கிரைக் டிலி கூறியதாவது:

சமூகத்தில் பின்பற்றப்படும் நடைமுறையை நாங்களும் பின்பற்றவுள்ளோம். எங்களுடைய வீரர்கள், 12,000 ஊழியர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட்டோம் - யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் வீட்டிலேயே இருந்துவிடுங்கள். கிரிக்கெட்டில் உள்ளது போல கரோனா பாதிப்புள்ள வீரர்களும் ஆஸ்திரேலிய ஓபனில் போட்டியிடுவார்கள். உடல்நிலை சரியில்லையென்றால் வெளியே தங்கவும் பரிந்துரை செய்துள்ளோம். எங்களுடைய மருத்துவர் கரென் ஹோல்ஸர் வீரர்களை கவனித்துக் கொள்வார் என்றார்.

கடந்த வருடம் தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் பிரபல வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க முடியாமல் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

கருப்பு புறா... பிரியங்கா மோகன்!

சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

SCROLL FOR NEXT