செய்திகள்

இந்தியா டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பிரபல வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், முதல் டெஸ்டில் விளையாட மாட்டார். இந்த அணியில் நாதன் லயன், அஷ்டன் அகர், மிட்செல் ஸ்வெப்சன், முர்பி என நான்குச் சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஷேன், டிராவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கேம்ரூன் கிரீன், நாதன் லயன், அஷ்டன் அகர், மிட்செல் ஸ்வெப்சன், முர்பி, ஸ்டார்க், ஹேசில்வுட், போலண்ட், லான்ஸ் மாரிஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவுடன் தொடர்புடைய மியூல் கணக்கு மோசடி கும்பல் கைது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்!

நிலச்சரிவால் இடிந்த வீடு! 3 பேர் உயிரிழப்பு! | Darjeeling | Landslide | Rain

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவத் தயார்: அஸ்ஸாம் முதல்வர்!

குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி

SCROLL FOR NEXT